Sunday, February 2, 2014

ஆகாயமங்கை

மிஷேலோடு நான் கடந்த இரண்டு வருடங்களாக மிக நெருக்கமாய்ப் போயிருந்தேன். என்; வேலைத்தளத்தில் எனக்குப் பிடித்த ஒரே நண்பி அவள்தான். காரணமில்லாமலே ஒருவரை அதிகம் பிடித்துப் போய்விடுகின்றது. ஆனால் மிஷேலோடான எனது நெருக்கத்திற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் அவள் மேல் எனக்கு வந்தது ஒருவித பட்சாதாபம்தான். பின்னர் பாவனையற்ற அவளின் வாழ்க்கை முறை என்னைப் பல இடங்களில் சிந்திக்க வைத்தது. என்னை நான் மாற்றிக் கொள்வதற்கு அவளின் நடைமுறைகள் உதவியிருக்கின்றன. அந்த வகையில் அலுத்துப் போன எனது பாவனைகளிலிருந்து விடுபட எனக்கு அவள் தேவைப்படுவதை நான் உணரத் தொடங்கினேன். தொடக்கத்தில் அவள்மேல் எனக்கிருந்த பட்சாதாபம் கூட எனது பாவனை வாழ்க்கை முறையால் எழுந்தது என்றுணர்ந்த போது நான் வெட்;கிப் போனேன். எனக்கு அவள் ஒரு “மாதிரிப் பெண்” உதாரண புருஷியாகத்தெரிந்தாள். எனக்கு மட்டுமல்லரூபவ் இந்த மேற்கத்தேயரூபவ் ஆணாதிக்க கால ஓட்டத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு அவள் நிச்சயம் ஒரு உதாரண புருஷிதான்.

“மூண் ரைம்” சந்திரநேரம். மாதமொருமுறை வானத்தில் பிரகாசித்துவிட்டுப் N;பாகும் சந்திரன் போல் மூண்ரைம் பெண்களைப் பிரகாசிக்க வைக்கின்றது. இந்தக்காலப் பகுதியில் பெண்கள் பலம் பொருந்தியவர்களாக மாறிப் போகின்றார்கள். பெண்கள் இயற்கையை வெல்லும் காலமிது. இவ்வேளையில் ஆண்கள் பெண்களைக் கண்டு பயந்து ஒதுங்கி இயற்கைக்குப் பின்னால் மறைந்து கொள்கின்றார்கள்.
மிஷேல் நத்தை ஓட்டுக்குள்ளிருந்து எழும் புகையைரூபவ் கழுகுச் சிறகால் தள்ளிப் பரவவிட்டபடியே  என் அருகில் வந்தாள். நான் “இல்லை” என்பது போல் தலையாட்ட புரிந்து கொண்டு கடந்து போனாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். கடும் நீலநிறத்தில் மஞ்சளும்ரூபவ் சிவப்பும் ப+ப்போட்ட நீளமான சட்டை அணிந்திருந்தாள். இடுப்புப் பட்டியில் சின்னதாக மணி இருந்திருக்க வேண்டும.; அவள் நடக்கும் போது கால்சங்கிலி போல் அது சிணுங்கிக்கொண்டிருந்தது. தோளோடு தொங்கும் அவள் தலைமுடி “பெப்பரும்ரூபவ் சோல்ட்டும்” ஆகக் காணப்படும். வாழ்க்கையில் ஒருபோதும் தலைக்கு “டை” அடித்ததில்லை என்றாள். நான் அவளை அதிசயமாகப் பார்க்கரூபவ் உடம்பின் மிக முக்கியமான பகுதியான மூளை தலையில் இருக்கின்றதுரூபவ் அழகுகென்ற வெறும் நம்பிக்கைக்காய் அதற்கு நான் தடங்கல்களை ஏற்படுத்த விரும்பவில்லை என்றாள். எனது கருகருவென்ற தலைமயிர் எனக்கு வெட்கத்தைத் தந்தது. சோல்ட்டும் பெப்பருமாய் அவள் அழகாகத்தானே இருக்கின்றாள். நான் தலைக்கு “டை” அடிப்பதை அன்றிலிருந்து விட்டுவிட்டேன்.
ஒவ்வொரு கிழமையும் தவறாமல் அவள் நத்தை ஓட்டோடு வரும்போது எனக்கு எனது அப்புவின் ஞாபகம் வரும். வெள்ளிக்கிழமையானால் விடிந்ததும் முதல் வேலையாகக் குளித்துரூபவ் சாமியறையில் மணியடித்துப் பிரார்த்தித்து வீடு முழுவதும் சாம்பிராணி காட்டுவார். அதன் பின்னர்தான் தேத்தண்ணி அவரின் தொண்டைக்குள் இறங்கும். சாம்பிராணியைக் கொண்டு வரும் போது எனது அறைக்குள் எட்டிப்பார்த்து என்னிடமும் நீட்டுவார். நான் இரண்டு கைகளாலும் புகையை அள்ளித் தலையிலும் முகத்திலும் தடவிக்கொள்வேன். மிஷேல் மிக நிதானமாகப் புகையை எப்படி உடம்புடன் தொடர்புகொள்ள வைக்க வேண்டும் என்று எனக்குப் பலதடவைகள் சொல்லித்தந்திருந்தாள். அப்போதுதான் அது உடலிலிருந்து எழும் எதிர்மறை உணர்வுகளை அகற்றித் தூய்மையாக்கும் என்பாள். நான் எனது அப்பு சொல்லித்தந்த முறையில்தாள் செய்துகொண்டிருந்தேன். அவள் சிரித்த படியே சொன்னாள் “எல்லாம் ஒன்றுதான்” என்று.

அவள் புகைபரப்பும் நத்தை ஓட்டை என் முன்னே நீட்ட நான் “இல்லை” என்று தலையாட்டியதை அடுத்த மேசை ஜேய்சன் கவனித்திருப்பானா என்று எனக்குச் சங்கடமாகவிருந்தது. நான் “மூண்ரைமில்” இருக்கின்றேன் என்று அனைவருக்கும் பறை சாற்றுவது போலிருக்கிறது என்ற அவளிடம் சொன்னேன். அவள் புரியாதவளாக என்னை வினோதமாகப் பார்த்தாள்.
“இந்துமதத்தில் மாதவிடாய்க்காலம் பெண்களைத் தீண்டத்தகாதவர்களாக்குகின்றது. புனித ஸ்தலங்களுக்குளிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுகின்றார்கள். சில வீடுகளில் குசினிக்குள்ளிருந்தும் அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள். இதனால் வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு அவர்களின் மாதவிடாய்க்காலம் பறைசாற்றப்படுகின்றது. ஐந்து அண்ணாவிற்கு ஒரு தங்கையாயப் பிறந்த எனக்கு இது ஒரு பெரிய அவமானம். இதனாலேயே நான் மாதவிடாய்க்காலங்களில் கூட அதை மறைப்பதற்காய் குசினிரூபவ் சாமியறையென்று போய் வந்துகொண்டிருந்தேன். பின்னர் சாமிக்குற்றம் அதனால் நான் தண்டிக்கப்படப் போகின்றேன் என்று பயந்த நாட்களுமுண்டு. ஒரு இந்துவாய் இதனை நான் வெறுக்கிறேன். எழுதி வைத்ததைப் படபடவென்று மூச்சு முட்டாமல் வாசித்து போல் சொல்லி விட்டு நிமிர்ந்த N;பாது என் கண்கள் பனித்திருந்தது. மிஷேல் என்னைத் தழுவிக்கொண்டாள்.

“நீ மாதவிடாயக் காலத்திலிருக்கின்றாய் என்பதை உனது வீட்டு ஆண் உறுப்பினர்கள் தெரிந்ததுகொள்வதை நீ ஏன் கேவலமாகரூபவ் அவமானமாகப் பார்க்கின்றாள். பெண் எனும் அம்மாவிலிருந்து பிறந்தவர்கள்தானே அனைவரும்.?”
நான் அவசரமாகத் தலையை ஆட்டினேன் “எங்கள் கலாச்சாரத்தில் அது ஒரு ரகசிய விஷயமாகப் பார்க்கப்படுகின்றதுரூபவ் இது பெண்களுக்கான அந்தரங்கமான விடையம்” என்றேன். மிஷேல் வாயைப் பிளந்து பெரிய நகைச்சுவையைக் கேட்டுவிட்டது போல்ச் சிரித்தாள். நான் மௌனமானேன். “உங்கள் கலாச்சாரத்தில்தானேரூபவ் முதல் மூண்ரைமைப் பெரிதாகக் கொண்டாடுகின்றீர்கள்.? ஊர் முழுவதற்கும் பறைசாற்றும் போது உனக்குள் எழாத அவமானம் உன் கூடப்பிறந்தவர்களுக்குத் தெரியும் போது ஏன் எழுகின்றது?  இப்பிடி ஒருநாள் மிஷேல் கேட்ட கேள்விதான் எனது மகள் பெரியவளானபோது சடங்கு செய்யாமல் என்னைத் தடுத்திருக்கின்றது.
உன்னுடைய மத நடைமுறைகளுக்கும்ரூபவ் எமது கலாச்சார நம்பிகைக்களுக்கும் அதிகம் வித்தியாசமில்லை. மூண்ரைம்” இல் பெண்கள் இன்னமும் பலவீனமாகப் போய் விடுகின்றார்கள். அவர்களை “இந்த ஆண்”களிடமிருந்து காப்பாற்றுவதற்கு எமது முன்னோர்கள்ரூபவ் அனேகமாப் பெண்களாய்தான் இருக்கும்ரூபவ் கண்டுபிடித்த யுக்தி இது. “மாதவிடாய்” என்று உங்கள் மதநம்பிக்கைகள் மூலம் பெண்கள் தொடக்கூடாதவர்களாகி ஆண்களிடமிருந்தும்ரூபவ் கடினமான வேலைப் பழுவிலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்றார்கள். அதே போல்த்தான் “மூண்ரைம்” என்று எமது கலாச்சாரம் மூலம் பெண்கள் அதிகம் சக்தி வாய்ந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுரூபவ் அவர்கள் சினம் கொண்டால் ஆபத்து என்று ஆண்களுக்குப் பயம் காட்டி வைத்திருக்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரை இரண்டிலும் அதிகம் வேறுபாடில்லை. இரண்டுமே பெண்களுக்கு சார்பானதுதான்.
மிஷேல் கணவன் அற்ற ஒன்றைத் தாய். அவளுக்கு இப்போது மூன்றரை வயதில் ஒரு பேரப்பிள்ளைகூட இருக்கின்றது. அவள் தனது செல்போனில் தனது பேரப்பிள்ளையின் படத்தைக் காட்டியபோதுரூபவ் நான் அவளைரூபவ் அவள் குடும்பத்தைக் கணித்துவிட்டிருந்தேன். அவளுக்கு என்னைவிட ஐந்து வயது குறைவு. எனது மகள் இன்னமும் பல்கலைக்கழகத்திற்கே செல்லவில்லை. ஆனால் மிஷேலுக்கோ பேரப்பிள்ளை கூட இருக்கின்றது. எனது கணக்குப் படி மிஷேல் பதின்மூன்று வயதிலும்ரூபவ் அவளது மகள் பதினைந்து வயதிலும்; குழந்தையைப் பெற்றிருக்கின்றார்கள். எனது வழக்கமான மொழியில் “ஒரு கேவலங்கெட்ட குடும்பம்”. மிஷேல் தற்போது றையசன் பல்கலைக்கழகத்தில் “கனேடிய ப+ர்வீக குடிகளும்ரூபவ் அவர்கள் கலாச்சாரமும்| பாடத்தின் விரிவுரையாளராகப் பகுதி நேரம் வேலை செய்வதாக ஒருநாள் என்னிடம் கூறினாள். பல்கலைக்கழக விரிவுரையாளராக வேலை செய்வதென்றால்? நான் சந்தேகத்துடன் அவளைப் பார்க்கரூபவ் சிரித்த படியேரூபவ் எனக்கு அதற்கான அத்தனை தகுதிகளுமிருக்கின்றதுரூபவ் நான் கலாநிதிப் பட்டம் பெற்றவள் என்றாள். மிஷேல் எப்போதுமே தன்வசம் அதிசயங்களை அடக்கியவள் என்பதைப் போகப் போகப் புரிந்து கொண்டேன்.

ஒருநாள் சாப்பாட்டு நேரம் நானும் மிஷேலும் எமது சாப்பாட்டைப் பகிர்ந்து சாப்பிட்டபடியேரூபவ் எமது வேலைத்தளத்தில் இடம்பெறும் அரசியல்கள் பற்றி ரகசியமாக அலசிக்கொண்டிருந்தோம். அப்போது எமது அலுவலக வரவேற்புப் பெண்மணி அவசரமாக ஓடிவந்து மிஷேலின் காதுக்குள் ஏதுவோ ரகசியமாகச் சொன்னாள். மிஷேலின் முகம் பேயறைந்தது போல் மாறிவிட்டது. உடனே வரவேற்பாளரோடு அங்கிருந்து சென்றுவிட்டாள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது இடையில் என்னிடம் எதையும் கூறாமல் அவள் சென்றது எனக்கு மிகவும் சங்கடமாகவிருந்தது. சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியவில்லை. மௌனமாக எனது சாப்பாட்டைப் பிசைந்தவண்ணமிருந்தேன். சாப்பிட முடியவில்லை. அனைத்தையும் கொட்டிவிட்டுரூபவ் வரவேற்புப் பெண்மணிக்குப் போன் செய்து மிஷேல் எங்கே என்று விசாரித்தேன். மிஷேலின் சகோதரி வந்திருப்பதாகவும் அவர்கள் வரவேற்பறையில் இருப்பதாகவும் எனக்குத் தகவல் தந்தாள். சிறிது நேரம் காத்திருந்து விட்டு நானும் வரவேற்பறைக்குச் சென்றேன். வரவேற்பறையில் ஒரு சிறிய கூட்டம் நின்றது. நடுவில் ஒரு பெண் நிலத்தில் குப்புறப்படுத்திருந்தாள். அவள் சத்தி எடுத்ததிற்கு அடையாளமாக அவளைச் சுற்றி கழிவு நீர் போல தெறித்துக் கிடந்தது. மிஷேலும் இன்னும் சில பெண்களும் குப்புறக்கிடந்த பெண்ணைத் தூக்க முயன்று கொண்டிருந்தார்கள். அவள் முணகிய படியே அவர்களைக் கையாலும் காலாலும் தள்ளி உதைந்துகொண்டிருந்தாள். நான் அங்கு சென்ற போது வரவேற்புப் பெண்மணி தயவுசெய்து உங்கள் மேசைக்குப் போய் விடுங்கள்ரூபவ் கூட்டம் வேண்டாம் என்று அங்கு கூடி நின்றவர்களை அகற்றிக்கொண்டிருந்தாள். எனக்குச் சங்கடமாகப் போய்விட்டது. எனது வேலை நேரமும் வந்துவிட்டதால் நான் அங்கிருந்து செல்லத் திரும்பினேன். அப்போது மிஷேல் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதாய் நான் உணர்ந்தேன்.

“உலகின் முதல் மக்கள் ஆகாயமக்கள். அவர்கள் ஆகாயத்தின் மேல் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். காரணம் அப்போது புவி என்பது இருக்கவில்லை. ஒருநாள் தலைவரின் மகளான ஆகாயமங்கை மிகவும் உடல்நலம் குன்றிப் போனாள். அவளுக்குச் சிகிச்சை செய்வதற்கு ஒருவராலும் முடியவில்லை. பாண்டித்தியம் பெற்ற முதியவரிடம் ஆலோசனை கேட்டார்கள். அம்முதியவர் ஒரு மரத்தில் துளையொன்றைப் போட்டு அதற்குள் ஆகாய மங்கையைக் கிடத்தி மூடிவிடுமாறு கூறினார். அவர்களும் அப்படியே செய்தார்கள். உடனே அந்த மரம் ஆகாயத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. ஆகாயத்திலிருந்து மரத்தோடு அழகான பெண் விழுந்துகொண்டிருப்பதைக் கீழிருந்த கடலுக்குள் நீந்திக்கொண்டிருந்த அன்னங்கள் இரண்டு பார்த்துவிட்டன. அப்பெண்ணைக் காப்பதற்காக அந்த அன்னங்கள் கடல்த் தலைவனான ஆமையின் ஓட்டில் அப்பெண்ணைத் தாங்கிக் கொண்டன. ஆமைத்தலைவன் இப்பெண் கடல் மக்களின் அதிஸ்டதேவதை என்றான். இவள் எங்கேயிருந்து வந்தாள்ரூபவ் இந்த மரம் எங்கே கிடைக்கும் என்று அறிந்து வருமாறு கடல் மிருகங்களுக்கு ஆணையிட்டான். முயன்ற அனைத்து மிருகங்களும் தோல்வியோடு இறந்து போயின. இறுதியாக பெண் தேரையொன்று தான் அறிந்து வருவதாக கடலின் ஆழத்துக்குள் சென்றது. இறுதியில் களைப்படைந்த தேரை தனது முயற்சியைக் கைவிட்டது. கைவிடும் முன்னே தனது வாயிற்குள் அடக்கி வைத்திருந்த மண்ணை ஆமைத் தலைவனின் ஓட்டில் துப்பிவிட்டது. அந்த மண் வளரும் சக்தியைக் கொண்டிருந்தது. அது வளர்ந்து வளர்ந்து ஆகாயத்தின் பரப்பளவை அடைந்தது. கீழே கடல் மேலே ஆகாயம் கொண்ட பரப்பு இருளாக இருப்பதாகத் ஆமைத் தலைவன் கண்டான். எனவே சிறிய ஆமைகளை ஆகாயம் சென்று வெளிச்சம் கொண்டு வருமாறு வேண்டினான். சின்ன ஆமைகள் தமது சக்தி மூலம் ஆகாயம் சென்றன. செல்லும் வழியில் மின்னலைக் கண்டடைந்து வெளிச்சத்தைச் சேகரித்தன. ஒரு பெரிய வெளிச்ச உருண்டையும்ரூபவ் ஒரு சின்ன வெளிச்ச உருண்டையும் உருவாக்கி மேலிருந்து கீழே எறிந்தன. பெரிய வெளிச்ச உருண்டை சூரியனாகவும்ரூபவ் சின்ன வெளிச்ச  உருண்டை சந்திரனாகவும் மாறின. அன்றிலிருந்து இரவும் பகலும் உருவானது. ஆகாயமங்கை ஆமைத் தலைவனின் ஓட்டுப் பூமியில் வாழத் தொடங்கினாள். அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒருவன் நல்லவனாகவும்ரூபவ் மற்றவன் கெட்வனாகவும் காணப்பட்டான். நல்லவன் பெயர் தறண்வொகியாவகன்ரூபவ் கெட்டவன் பெயர் தவிஸ்ஹறன். ஆகாயமங்கையின் மார்பிலிருந்து மூன்று பெண்கள் உருவானார்கள். அவர்கள் சோளம்ரூபவ் அவரைரூபவ் ப+சனி.”

தான்தான் அந்த ஆகாயமங்கை என்றாள் மிஷேல். நான் மௌனமானேன். மிஷேலோடு இரண்டு ஆண்டுகளாக மிகநெருக்கமாகப் பழகி வந்தாலும். அவள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி முழுதாக நான் அறிந்திருக்கவில்லை இருந்தும் அவளது அந்தரங்கத்திற்குள் என்னால் நுழைய முடியவில்லை. அவள் வேலை நேரம் போக நிறம்பவே சமூக வேலைகளைச் செய்து வந்தாள். முக்கியமாக கனேடிய ப+ர்வீக குடிகளின் வாழ்க்கை முறையில் ஒரு சீரிய மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மிகவும் அக்கறையோடு அவள் இயங்கிவந்தாள். தனிப்பட்ட வாழ்க்கையென்று பார்த்தால் அடிக்கடி தனது பேரன் பற்றிக் கதைப்பாள். ஒருநாள் வேலைத்தளத்திற்கும் அவனை அழைத்து வந்தாள். நாங்கள் மூவரும் வெளியில் சென்று வந்தோம். எனக்கு அவள் சகோதரி பற்றி அறிந்து n;காள்ளும் ஆவல் இருந்தது. ஆனால் கேட்பது நாகரீகமில்லைரூபவ் அவளாகச் சொல்லட்டும் என்று காத்திருந்தேன். நான் எதிர்பார்க்காத ஒருநாளில் அவள் தன்னைத் திறந்து கொண்டாள். தன்பாரத்தை என்மேல் ஏற்றிவிட்டு அவள் ஆகாயமங்கையாகிப் போகப் போகின்றாள் என்பது எனக்கு அப்போது புரியவில்லை.

மிஷேல் கூறத் தொடங்கினாள்.
நான் குடியிருப்பு பள்ளிக்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப் பட்டபோது எனக்கு ஐந்து வயது. குடியிருப்பு பள்ளியென்றாலே “இந்தியனிலிருக்கும் இந்தியத் தன்மையைக் கொல்லுவது” என்று பொருள்படும். நான் கொல்லப்பட்டேன். நாங்கள் கொல்லப்பட்டோம். எனது சமூகம் முற்றாகக் கொல்லப்பட்டது. இப்போது நீ காண்பது எதுவுமேயற்ற ஜடங்களை மாத்திரமே. எழமுடியாத அளவிற்கு எம் சமூகத்தைச் சாய்த்துவிட்டு இன்று மன்னிப்புக் கேட்கின்றது கனேடிய அரசு. குடியிருப்பு பள்ளியில் நான் அனைத்துத் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளானேன். என் உடம்பின் ஆழத்தில் கரைக்க முடியாத ஒரு கல்லாய் அது இறுகிப் போயுள்ளது. உனக்குத் தெரியாதுரூபவ் இதுவரை பதின்மூன்று தடவைகள் மனஅழுத்தம் காரணமாக நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றேன். இன்றும் மருந்துகளின் உதவியுடன்தான் வாழ்ந்துகொண்டுமிருக்கின்றேன்.

இறுகிப் போயிருந்த முகத்தோடு சிலநிமிடங்கள் மௌனமாகவிருந்தவள் பின்னர் தொடர்ந்தாள். எனது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.
எனக்குக் கூடப்பிறந்த சகோதரிகளும்ரூபவ் சகோதர்களும் இருக்கின்றார்கள். ஆனால் எத்தனை பேர் என்பதும்ரூபவ் அவர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்பதும் தெளிவில்லை. அன்று நீ கண்டது எனது இளைய சகோதரி அவளோடு மட்டும் எனக்குக் கொஞ்சம் தொடர்பிருக்கின்றது. எனது சகோதர்கள் அனைவரும் ஒரே அம்மாவிற்குப் பிறந்தவர்கள்ரூபவ் ஆனால் அப்பா பற்றிய தகவல்கள் தெரியவில்லை. பதின்நான்கு வயதில் நான் கருத்தரித்திருந்ததன் காரணத்தால் என்னை மீண்டும் பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பாட்டியின் வீட்டில் பாட்டியின் தலைமையில் நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்கள். அம்மா வீட்டை விட்டு வெளியேறி எங்கேயோ சென்று விட்டாள் என்றும் அவள் பற்றிய தகவல்கள் தனக்குத் தெரியாது என்றும் பாட்டி சொன்னாள். எனக்கு அம்மாவின் முகம் நினைப்பில் இல்லை. குடியிருப்புப் பள்ளியில் நான் நான்காம் வகுப்புவரை படித்திருந்தேன். அதன் பின்னர் தோட்ட வேலைக்கு அனுப்பப் பட்டேன். எனக்கு கல்வியில் அதிக நாட்டம் இருந்தது. பாட்டியிடம் திரும்பி வந்ததும் நான் படிக்க வேண்டும் என்ற ஆசையை அவளுக்குக் கூறினேன். பாட்டி எனது குழந்தையின் பொறுப்பை முழுமையான எடுத்துக் கொண்டு என்னைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். கல்வி ஒன்றுதான் என்னை ஆழத்துக்குள் விழவிடாமல் தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு அப்போதே ஏற்பட்டிருந்தது. நான் என் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை வைத்து ஆர்வத்தோடு கடுமையாக கல்வி கற்க ஆரம்பித்தேன். என்னைப் போலவே எனது மகளும் கல்வி கற்க வேண்டும் என்று மிகவும் போராடினேன். அவளுக்குக் கல்வியில் அதிகம் நாட்டமிருக்கவில்லை. சொந்தங்களோடு சேர்ந்து சிறுதொழில்கள் செய்யத் தொடங்கினாள். பதின்மூன்று வயதில் கற்பமாக வந்து என் முன்னே நின்றாள். எதிர்காலத்தின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையில் முதல் விழுந்த அடி அது. அப்போது எனது பாட்டி உயிரோடு இல்லை. பாட்டி என்னைத் தாங்கியது போல் கனத்த மனத்தோடு அவளைத் தாங்கிக் கொண்டேன். பின்னர் எனது படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி மகள் பேரப்பிள்ளையோடு ரொரொன்டோவிற்கு வந்துவிட்டேன். எனது சமூகம் குலைந்து போயுள்ளது. அவர்களை போதையின் உச்சத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து விழிப்புணர்வைக் கொண்டு வருவதன் மூலமே இன்னும் நாம் அடிமைப்பட்டிருப்பதிலிருந்து விடுதலை அடைய முடியும் என்று என்னால் முடிந்தததைச் செய்கின்றேன். இருப்பினும் ஒருபடி முன்னேற பல படிகள் சறுக்கிக் கொண்டு போய்க்கொண்டிருப்பதாய் உணர்கின்றேன் என்றாள்.

பின்னர் மிஷேல் மிக நீண்ட நேரம் மௌனமானாள்.
அவள் கைகள் சிறிது நடுக்கம். எனது கைகளுக்குள் அவள் கைகளைச் சேர்த்துக்கொண்டேன். அவள் கண்கள் பனித்து நான் கண்டதில்லை. அதனால் அவள் முகம் பார்க்க நான் தயங்கினேன். நாளை அவளின் உயிரிழந்த முகத்தை நீண்ட நேரம் விறைத்த படியே பார்த்துக்கொண்டிருக்கப் போகின்றேன் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் நடுங்கும் அவள் கைகளை நான் ஒரு போதும் விட்டிருக்க மாட்டேன். பனித்த அவள் கண்களை அழுத்தித் துடைத்து அணைத்துக் கொண்டிருந்திருப்பேன்.

 ·       குடியிருப்புப் பள்ளி –ப+ர்வீககுடிமக்களின் குழந்தைகள் அவர்கள் குடும்பங்களிலிருந்து பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு கத்தோலிக்க மடப்பள்ளிகளில் வளர்க்கப்பட்டார்கள். இதனை கனேடிய அரசும்ரூபவ் கத்தோலிக்க சபைகளும் இணைந்து செயல்படுத்தின. ப+ர்வீககுடிமக்களின் வாழ்க்கைமுறைரூபவ் கலைரூபவ் கலாச்சார பண்பாடுகள் அனைத்தும் மிகவும் தாழ்ந்தரூபவ் இழிவான நிலையிலிருப்பதனால் அவர்களை மேம்பட்ட (வெள்ளையினரூபவ் இனக் கத்தோலிக்க) வாழ்க்கை முறைக்கு மாற்றியமைத்தல் என்பதே இக்குடியிருப்பு பள்ளிகளின் முக்கிய நோக்கமாகும்.

Residential Schools
Two primary objectives of the residential school system were to remove and isolate children from the influence of their homes, families, traditions and cultures, and to assimilate them into the dominant culture. These objectives were based on the assumption Aboriginal cultures and spiritual beliefs were inferior and unequal. Indeed, some sought, as it was infamously said, “to kill the Indian in the child.” Today, we recognize that this policy of assimilation was wrong, has caused great harm, and has no place in our country.
Prime Minister Stephen Harper, official apology, June 11, 2008  

ஜனவரி 2014 ”உரையாடல்”

No comments: