Monday, December 26, 2011

தனிமை


அடர்ந்து படர்கிறது தனிமை 

பூதாகரமாய் வேர்விட்டு வளருமதை
அழிக்க வழியறியாது தவிக்கின்றேன்.

விருந்தினர் வருகின்றார்கள்
போகின்றார்கள்,
நானும் போயும் வந்துகொண்டுமிருக்கின்றேன்.

என்னுள் கொடியவிலங்கொன்று
எதனையும்  நெருங்கவிடாமல் தடுத்தபடியிருக்கின்றது.

எதையும் அனுபவிக்க முடியில்லை
இயந்திரங்கள் இயற்கையில் சுகந்தத்தை
எனக்காய்த் துப்பிக்கொண்டிருக்கின்றன.

காற்றைக் காற்றாடியினுாடும் சொந்தங்களை
தொலைபேசினுாடும் பெற்றுக்கொண்டிருக்கின்றேன்.

பாரமற்ற தனிமை என் கால்களைச் சுற்றிக்கொண்டு
என்னைத் தளர்வடையச் செய்கின்றது.

யாராவது சொல்லுங்களேன்
தனிமை எனக்கு மட்டுமே சொந்தமானதா?