Monday, June 6, 2022

நான்

 துண்டிக்கப்பட்ட என் கையிலிருந்து

துளிர்த்தெழுந்தது

சின்ன வயதில் 

நான் விழுங்கிய புளியங்கொட்டை


என்னுடலென

ஆரத்தழுவியதை நீரூற்றி வளர்க்க

விருட்சமானது

புழுபூச்சிபறவைகள்மிருகங்களென

அனைத்தும் 

அடைக்கலம் கொண்டன என்னுள்

மிரண்ட அவர்கள் 

மீண்டும் வெட்டினர்

என் அடுத்த கையையும்


நான் விழுங்கிய வேம்பங்கொட்டை வீறுகொண்டெழுந்தது


என் வயிற்றுக்குள்

இன்னும் அடைந்து கிடக்கின்றன 

பல விதைகள்


விரைவில் நானொரு காடாவேன்.

04/29/2021